விலா எலும்பில் வலு தேயும் வரை
விடுவதில்லை என எனைத் தேடிப்பார்க்க
ஆரம்பித்துவிட்டேன்!
மலை முகடுகளில் பொட்டல் காடுகளில்
பாதை தெரியும் வரை என்
பாதம் தேயும் வரை!
உமியைத் தூக்க தெம்புள்ளவரை
கலவி ஆசை நரைக்காதாம்!
உமியைப் பார்க்க முடியும் வரை
எனைப் பற்றிய என் தேடல் ஆசையும் நரைக்கப் போவதில்லை!
இந்தப் பாதை எங்கே முடியும் என்று எனக்கு கவலை இல்லை
எனக்கான இன்னுமொரு பாதையை முடிந்த இடத்திலிருந்து வகுத்துக் கொண்டு எனைப் பற்றிய தேடல் பயணம் இனிதே தொடரும்!
பயம் வரும் வரை
பயணங்கள் எப்போதும் முடிவதில்லை!

"டேய்!"
பின்னாலிருந்து அரையிருட்டில் யாரோ ஒரு ஆண் கூப்பிடுவது போல் கேட்டது மணிக்கு.....
இருந்தாலும் நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்ததால் நின்று யாரென்று பார்க்க அவனுக்குத் தைரியம் வரவில்லை....
"இதுக்குத்தான் ரெண்டாம் ஆட்டத்துக்கு போகக் கூடாதுன்றது எங்க விட்றானுங்க..இப்ப பாரு அவனவன் வீட்டுக்குப் போய்ட்டான் நம்ம வீட்டுக்கு மட்டும் இந்த சுடுகாட்ட தாண்டி போக வேண்டியதா இருக்கு"-என மனதிற்குள் தன்னை நொந்து கொண்டான்.....
"டேய்!உன்னத் தாண்டா" --மீண்டும் அதே குரல் சற்றே அதட்டல் தொனியுடன் மிக அருகில் கேட்பது போல் தோன்றியது அவனுக்கு....
முகமெல்லாம் வியர்த்துப் போனது இதயம் நிமிடத்திற்கு லட்சம் முறை துடிப்பதாக தோன்றியது அவனுக்கு....
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடையின் வேகத்தை சற்றே கூட்டினான்.....
"டேய்!மணி நில்லுடா"
சப்த நாடியும் அடங்கி விட்டது மணிக்கு......
நின்றான்! உலகில் உள்ள அத்தனை கடவுளரையும் துணைக்கு அழைத்தான்..
தூரத்தில் யாரோ சைக்கிளில் வருவது தெரிந்ததும்....பயம் சற்றே விலகிய தைரியத்தை அவனுள் வரவழைத்தது....
அந்த உருவம் மெல்ல நெருங்கி வருவது தெரிந்தது மணிக்கு...
தோளில் கை வைத்தது!ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த மணிக்கு நடுக்கம் அதிகமாகி மயங்கி கீழே விழும் நிலை......
மெதுவாகத் திரும்பி முகத்தைப் பார்த்தான்....
கலவரம் விலகாதவனாய் உற்று நோக்கினான்
பக்கத்து வீட்டு திலீப் தான் அது....
"இப்பதாண்டா ஊர்ல இருந்து வரேன்.அங்கயிருந்து உன்னப் பாத்துட்டு கூப்பிட்டுக்கிட்டே வரேன்,திரும்பி கூடப் பாக்க மாட்ற.நல்லாயிருக்கியாடா...வீட்லஎல்லாம் நல்லாயிருக்காங்களா"திலீப் கேட்டான்
விட்ட மூச்சை திரும்பி வாங்கி கொண்டிருந்தான் மணி.
"டேய்!ஏண்டாஎன்னவோ போல இருக்க"னு திலீப் கேட்டதும் பற்றிக் கொண்டு வந்தது மணிக்கு அடக்கிக் கொண்டு "அதெல்லாம் ஒண்ணுமில்லடா"நு சமாளித்து ஒரு நிலைக்கு வந்தான்.
ஊர் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
மணி உள்ளூரில் 3ம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பட்டப் படிப்பு படிப்பவன்.
திலீப் சென்னையில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படிப்பவன்.இப்போது விடுமுறை ஆதலால் ஊருக்கு வந்துள்ளான்.
"டேய் மணி ராதா என்னடா ஆனா?"
(இருவரும் உயர் கல்வியில் கற்ற பாடங்களில் ராதாவும் ஒருத்தி)
"அவளுக்குத்தான் அடுத்த மாசம் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்கடா"
சோகமாய்க் கூறிவிட்டு ஏதும் பேசாது அந்த பள்ளி நாட்களை அசை போட ஆரம்பித்தான் மணி......


அசை போடுவோம்.....

SMS கடிகள் ஜாக்கிரதை..

பின் வரும் கடிகளை கடித்தவர்கள் "வெறித்தனமா யோசிப்போர் சங்க கண்மணிகள்"

கடி 1:

Man1: Bus stand la Meen saapta moonu per mandaya pottuttaankalaam..
Man2: Aiyayyo! appuram?
Man1: Appuram mandaya Naai Thookittu poiduchaam..

கடி 2:

Stu: Enna sir ithu?
Tea: Question Paper..
Stu: Appo ithu?
Tea: Answer paper..
Stu: Enna Koduma sir ithu question paper la question irukkuthu..answer paper la answer’a kaanom..

கடி 3:

Thirumaal senjaa “Makimai”
Sivan senjaa “Thiruvilayaadal”
Kannan senja “Leelai”
Boys Naanga senja mattum “Eve-Teasing” aa
Enna Ulagamadaa..

கடி 4:

Tea: Avan mattum evlo nalla padikkiraan unnala Yen mudiyala..
Stu: Naan Avan Illai Madam..

கடி 5:

Sorry for the disturbance,Intha Address enga irukkunnu konjam solla mudiyumaa..
M.Kumaran S/O.Mahalakshmi,
7G,Rainbow Colony,
Anna Nagar Muthal Theru,
Chennai-600028.

எப்பிடியெல்லாம் கடிக்கிறாய்ங்க பாருங்க மக்களே!

இன்று (04/07/2007) உன் பிறந்த நாள்.....


நமக்கு இடையில் இந்த வாழ்த்துக் கவிதையெல்லாம் தேவையில்லை தான் என்றாலும் என்னை வெளிப்படுத்த இந்த் இனிய நாளை சந்தர்ப்பமாக்கிய என் வார்த்தைகள்...

பூமிக்கு என் உடல் வந்து 2 ஆண்டுகள்
கழித்து உயிர் வந்த அதிசயம்-நீ!

என் ஆழ்மனதின் ஓசைகளையும் கேட்கும்
திறன் கொண்ட அதிசயம்-நீ!

என் ஒவ்வோர் தேவைகளையும் சரியாகத்
தெரிந்த அதிசயம்-நீ!

வினாக்களையே தரும் என்னிடம் என்றும்
விடையாகத் தெரியும் அதிசயம்-நீ!

என் ஒவ்வொரு காத்திருப்புக்கும் அர்த்தம் சொன்னவன் நீ!
என் மொத்த வாழ்வின் காத்திருப்பின் அர்த்தமும் நீ!

இலக்கியம் சொன்ன இலக்குவனை நான் அறியேன்!
ஆனால் என் வாழ்வின் இலக்கணம் நீ!

எனக்காக எதையும் செய்பவன் நீ
உனக்காக எதை நான் செய்ய எத்தனித்தாலும்
"எதுக்கு அது?"என்பவன் நீ!

ஏற்றத்தில் தட்டிக் கொடுப்பவனும் நீ!
இற்க்கத்தில் தட்டி வைப்பவனும் நீ!

உடன் பிறந்தவனுக்கு உதவி செய்வதையே பாரமென
எண்ணும் உலகில் உடன் பிறந்தவனின் நண்பர்களுக்கும்
உதவி செய்யும் உன் மனப் பாங்கு என்னிடமும்
எவரிடமும் கண்டதில்லை நான்!

நான் தட்டுத் தடுமாறிய பொழுதிலெல்லாம்
என் வாழ்க்கைப் பாதயைக் காட்டியவன் நீ!
மாற்றியவனும் நீயே!

நமக்குள் பெரிதாக எந்த பிரச்சினையும் எழுந்ததில்லை
எழவும் அனுமதிக்காதவன் நீ!
எனை அழவும் அனுமதிக்காதவன் நீ!

இன்னுமொரு பெற்றோராய்
உற்ற நண்பனாய்
நல்ல ஆசனாய்...
இப்படி எல்லாமுமாய் எனக்கு நீ!

நீ என் தம்பியாகக் கடவதற்கு தவம் தான்
செய்திருப்பேனோ என எண்ண வைக்கிறாயடா நீ!

மறு பிறவிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான்
ஆனாலும் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் வரும்
பிறவிகளிலும் உனைத் தம்பியாகப் பெற!

நம் பெற்றோரின் வாழ்வின் அர்த்தம் நாம்
உன் வாழ்வின் அர்த்தம் நாங்கள் எங்களுக்காக
எதையும் துச்சமெனத் தூக்கி எறிபவன் நீ
உனக்காகவே எங்கள் இந்த வாழ்க்கை.........

இன்னும் என்னென்னவோ மனதில் இருந்தாலும் வார்த்தைகளாய் வர மறுக்கும் அழகோவியங்கள் அவை. வாழ்த்துக்கள்டா குட்டி!

Happy Birthday da Kutti

நம்ம பில்லு கோர்த்துவிட்டபடியால் எதையாவது எழுதலாம்னு உட்கார்ந்து யோசிச்சா....

சரி நாம செஞ்ச 8 சாதனைகளைப்(?) பத்தி எழுதலாமா,இல்ல மறக்க முடியாத 8 விஷயங்களை எழுதலாமா,இல்ல பிடிச்ச 8 படங்களைப் பத்தி எழுதலாமா,இல்ல நம்ம வாழ்க்கைல ஒரு 8 வருஷத்தைப் பிரிச்சு எழுதலாமா,இல்ல நமக்கு பிடிச்ச 8 மனிதர்களைப் பத்தி எழுதலாமா,இல்ல எட்டாம் எண்ணைப் பத்தியே எழுதலாமா,இல்ல .................
.
.
இப்டியே யோசிச்சு யோசிச்சு ஒண்ணுமே தேறாத காரணத்தால் எனக்கு எட்டாத இந்த எட்டாம் ஆட்டத்திலிருந்து நான் ஜகா வாங்கிக்கிறேணுங்ணா....பில்லு ஊஹூம் ஒண்ணும் வேலைக்காகல....

ஆகையால் பில்லு நம்மளை மன்னிச்சிருங்க....Next Meet பண்றேன்
Sing in the Rain...
I want more in the rain.....



சூப்பர்ஸ்டார் என்றாலே சாதனை தான் அதிலும் தற்போது வெளிவந்து உலகை கலக்கி கொண்டிருக்கும் சிவாஜியின் சாதனையை முறியடிக்க சூப்பர்ஸ்டாரால் மட்டுமே முடியும்..இதோ சாதனைப் பட்டியல்..


உலக அளவில் ஒரே நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ரிலீஸ் ஆன ஒரே பிராந்திய மொழிப் படம் சிவாஜிதான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகியுள்ள சிவாஜி, விரைவில் மலாய், சீன, ஜப்பானீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

உலக அளவில் அய்ங்கரன் உள்ளிட்ட ஐந்து விநியோக நிறுவனங்கள் சிவாஜியை திரையிட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 340 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

வெளிநாடுளில் இந்தியப் படம் ஒன்று இத்தனை பிரிண்டுகளுடன் திரையிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தமிழிலும் இதுவே முதல் முறை.

90களில் வெளியாகி இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய ஷாருக்கானின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்திற்குக் கூட வெளிநாடுகளில் 60 பிரிண்டுகள்தான் அனுப்பப்பட்டன. அந்த வகையில் சிவாஜி படைத்துள்ள சாதனை இமாலய சாதனையாகும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி வெளியானபோது, வெளிநாடுகளில் 90 பிரிண்டுகள் அனுப்பப்பட்டன. அப்போது அதுதான் பெரிய தமிழ்ப் பட சாதனையாக இருந்தது. இப்போது சிவாஜி வந்து அதை முறியடித்து விட்டது.

இனி உலக அளவில் சிவாஜி செய்து கொண்டுள்ள சாதனைகளைப் பார்ப்போம்.

இங்கிலாந்து: இங்கிலாந்து சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாப் 10 பட பட்டியலில் சிவாஜியை சேர்த்துள்ளனராம். படத்திற்கு இன்னும் ரேட்டிங் கிடைக்கவில்லை. ஆனால் டாப் 10 பட்டியலில் இந்தியப் படம் ஒன்று இடம் பெற்றிருப்பதே பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் (ஸ்காட்லாந்து உள்பட) மொத்தம் 15க்கும் மேற்பட்ட சென்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளாம். லண்டனில் மட்டும் 5 தியேட்டர்களில் சிவாஜி போடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தைப் பார்த்த பின்னர் ஐந்து தியேட்டர்களிலும் வருகிற 28ம் தேதி வரைக்கும் சிவாஜியையே ஓட்ட முடிவெடுத்துள்ளனராம்.

ஸ்காட்லாந்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் சிவாஜிதானாம். அங்குள்ள கிளாஸ்கோ நகரில் படம் திரையிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்காவில் தமிழ் சிவாஜி 46 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் வழக்கமாக வார இறுதியில்தான் தமிழ்ப் படங்கள் திரையிடப்படும். ஆனால் சிவாஜி விஷயத்தில் இது தலைகீழாக மாறியுள்ளதாம்.

ரெகுலர் காட்சிகளாகவே சிவாஜி அங்கு ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப சில தியேட்டர்களில் மேலும் சில நாட்கள் சிவாஜியை திரையிட தீர்மானித்துள்ளனராம்.

தலைநகர் வாஷிங்டனில், முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளது (தெலுங்கிலும் இதுவே முதல் முறையாம்) என்ற பெருமை சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

பே ஏரியா பகுதியில், சிவாஜி 2 தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இதில் தமிழ் சிவாஜிக்கு மட்டும் 5000 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளதாம்.

தமிழர்கள் மட்டுமல்லாமல், பிற மொழி பேசும் இந்தியர்களும், அமெரிக்க வெள்ளையர்களும் கூட சிவாஜியைப் பார்க்க முட்டி மோதிக் கொண்டுள்ளனராம்.

கொலம்பஸ் நகரில் முதல் நாள் முதல் காட்சியன்று உட்கார இடம் கிடைக்காமல் ரசிகர்கள் பலர் நின்று கொண்டே படம் பார்த்தார்களாம். (கார்த்தி(மு.கா) நின்னுக் கிட்டேவா பாத்தீங்க :) )

அமெரிக்காவில் சிவாஜியைத் திரையிடும் விநியோக உரிமையைப் பெற்றுள்ள வாணி மோகன் கூறுகையில், படம் திரையிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ். பல தியேட்டர்களில் பெரும் திரளான வெள்ளையர்களையும் காண முடிந்தது. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அவர்களும் ஆடிப் பாடி படத்தை ரசித்தனர்.

சிவாஜி படம் மூலம் எனக்கு 200 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, டிரெண்ட் செட்டரும் கூட என்றார்.

கனடாவில் டொரண்டோ நகரில் 6 தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது. வான்கூவர், ஓண்டாரியோ நகரங்களில் தலா 2 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

எட்மாண்டன் உள்ளிட்ட நகரங்களில் கனடா தமிழ்ச் சங்கம் சார்பில் விசேஷ காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இணைய தளத்தில், இந்த வாரத்தின் நம்பர் ஒன் படமாக சிவாஜியை சிறப்பித்துள்ளனராம். சிவாஜிக்கு 10க்கு 9.7 மார்க் கிடைத்துள்ளதாம்.

மலேசியா, சிங்கப்பூரில் சிவாஜி பெரும் சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் 40 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். ஆனால் கூட்டம் பெரும் திரளாக மாறிப் போனதால் கூடுதலாக 20 தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர். 60 தியேட்டர்களிலும் சிவாஜி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

ஜெர்மனியில் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆவது வெகு அரிதானதாம். ஆனால் சிவாஜி அதையும் தாண்டி, 25 செண்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. மூனிச் நகரில் நடந்த 25வது வருடாந்திர திரைப்பட பொருட்காட்சியில், 2 நாட்களுக்கு சிவாஜியை திரையிட்டுள்ளனர். அதிரடி பாட்டுக்கு பல ஜெர்மானியர்கள் ஆட்டம் போட்டு ரசித்துததான் இதில் ரொம்ப விசேஷமானது.

அயர்லாந்திலும் சிவாஜி புகுந்து விட்டது. அங்கு டப்ளின் நகரில் 2 தியேட்டர்களில் 6 காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது. சிவாஜிதான் ஜெர்மனியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்விட்சர்லாந்தில் (5 செண்டர்களில் 20 காட்சிகள்), பிரான்ஸில் (எஸ்பேஸ் சினிமா பாரீஸில் 4 காட்சிகள்), நார்வேயில் (ஓஸ்லோவில் ஒரு காட்சி), போலந்தில் (வார்சாவில் 2 காட்சிகள்), நெதர்லாந்தில் (8 செண்டர்கள்), டென்மார்க்கில் (10 செண்டர்கள்), இத்தாலியில், (இரு நகரங்களில்) என சிவாஜி கலக்கி வருகிறது.

தமிழர்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் சாதனை அளவாக 25 பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 9 பிரிண்டுகளுடன் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கிலும் சிவாஜிக்கு அமோக வரவேற்பாம். துபாய், அபுதாபி, ஷார்ஜா, கத்தார், பஹ்ரைன் என பல நாடுகளில் சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம். ஆகஸ்ட் வரை இங்கு சிவாஜியை ஓட்ட முடிவு செய்துள்ளனராம்.

இலங்கையில் 14 பிரிண்டுகளுடன் 9 மையங்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே இங்கும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு டிக்கெட்டுகள் புக் ஆகி விட்டதாம்.

கை வலிக்க வலிக்க அடிச்சாலும் சிவாஜி கதை நீண்டு கொண்டே போகுதப்பா!

சூப்பர் ஸ்டாரின் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்!

இது ஒரு சின்ன கவிதை(?) பதிவு..இலக்கண,இலக்கியப் பிழைகளை விடுத்து படிச்சிட்டு comment ல துப்பீட்டுப் போங்க..அனைத்து விதமான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன....

என் இதயமெனும் Hard Diskல்-நீ
software ஆக install ஆகியிருந்தால்
எனை மறுத்த அன்றே uninstall செய்திருப்பேன்
Track களாய் அல்லவோ நிரம்பிவிட்டாய் என் செய்வேன்?
--------------------------------------------------------------
என் இதயத்தின் Databaseல்
முழுதாய் நிரம்பியவளே-உன்
இதயத்தில் ஒரு Record ஆகவாவது
நான் இருப்பேனா?
--------------------------------------------------------------
உன் விழி தரும் Select query களுக்கு
என் இதயத்தையே Return செய்யும்
என் Database!
இன்று ஏன் மௌனத்தைத் தருகிறாய்?
உன் மௌனத்தை மொழி பெயர்க்கும்
software ஐ தேடி என் மனம்!
--------------------------------------------------------------
சிறந்த system ஆக இருந்த என்னுள்
virus ஆக புகுந்து கொண்டு படுத்துகின்றாய்!
அழித்து விடுவாய் எனத் தெரிந்தும் உனை
அழிக்க மறுக்கும் என் Anti virus!
--------------------------------------------------------------

இந்த மாசத்துக்கான பதிவு கோட்டா முடிஞ்சிருச்சு அதனால Jolly யா இருந்தா நம்ம நண்பர் ACE(@)சரவணன் டேக் பண்ணதோட விடாம மீண்டும் ஞாபகப்படுத்திட்டாரு, ப்ளாக் நண்பர்கள் எல்லாரும் ஏற்கனவே ஏகப்பட்ட அழகுகளைப் போட்டு தாக்கிட்டாங்க அதனால பெரிய யோசனைக்குப் பிறகு கோடி அழகுகளில் இதோ என் ஆறு

1.உணவு
செவிக்கு கூட உணவில்லாம ஒரு வாரம் இருந்திட முடியும் ஆனா இந்த வயிற்றை 2 நாள் விட்டாலே என்னென்னவோ ஆயிடும்.
அதுலயும் அந்த இட்லி-சட்னி Combination super. காலைல எங்க வீட்ல தினம் இட்லிதான் அதுவும் எங்கம்மாவோட கைப்பக்குவத்து இட்லி சும்மா மல்லிகைப் பூ மாதிரி இருக்கும் அதுல ஒரு 10 அ 12 இட்லிய உள்ள தள்ளுனா ஆஹா அது தான் அழகு.இந்த மாதிரி மனதை குதூகலப்படுத்தும் எந்த உணவும் அழகுதான்

2.தண்ணீர்
உணவு கூட 8 மணி நேரத்துக்கு ஒரு தடவ சாப்பிட்டால் போதும் ஆனா இந்த தண்ணீர் இல்லன்னா அவ்வளவுதான்!
அதுனால தண்ணீர் எந்த வடிவத்திலும் அழகு ஆறு,கிணறு,அருவி,பானையில் உள்ள நீர்....

3.தூக்கம்
நிம்மதியான தூக்கம் ஒரு அழகு.தூக்கம் இல்லாமல் எந்த மனிதனாலும் சிறப்பாக செயல்பட முடியாது. அதுலயும் நிம்மதியான தூக்கம்னாஎப்பிடின்னா படுத்தா அடுத்த 5 நிமிஷத்துல தூங்கிடணும் அதுதான் வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் அழகு.

4.பொழுதுபோக்கு
அன்பே சிவம் படத்தின் ஓர் பாடலில் வரும் வரி " ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்ல"
இங்க போதைன்றது பொழுதுபோக்கு.
சின்ன வயசுல விளையாடிய கிட்டிப்புள்,கல்லா மண்ணா.... இதெல்லாமே அந்த வயது பொழுதுபோக்குகள் தான் அதுனால வயதுக்கேற்ற பொழுதுபோக்கும் அழகே!

5.வேலை
படிக்கும் போது படிக்கும் வேலை அழகு,வேலையில் சேர்ந்த பின் செய்யும் வேலை அழகு,சும்மா இருக்கும் போது கூட மனம் ஏதோ ஒன்றை அசை போடுவது வேலை தான் ஆக வேலை அழகு.

6.சிரிப்பு
இந்த அழகுக்கு வயது வித்தியாசமே கிடையாது.
உலகில் உள்ள அழகுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தாற் போன்று இந்த புன்னகை (எ) சிரிப்பு அழகு தான்.

எழுதாத அழகைப்(?) பற்றி எழுத எண்ணியதால் இந்த ஆறும் என் பார்வையின் வார்த்தையில்......











முன்னாடி போட்ட பதிவுல Image Size சின்னதா இருந்ததால சரியா படிக்க முடியலன்னு தெரிய வைத்த பொற்கொடி அவர்களுக்கு நன்றி.இதோ சரியான வடிவத்தில் மீண்டும், Click செய்தாலே போதும்..
வரிகள் உங்கள் கண்கள் முன் விரியும்

பதிவு போடாததுக்கு முக்கிய காரணம் மத்தவங்க பதிவ படிச்சிட்டு comment போட்றதே ரொம்ப சொகமா இருந்ததாலதான்..

இருந்தாலும் இதோ நம்ம Super நடிகரின் Sivaji-The Boss பாடல்கள் ஓர் சின்ன அலசல் (பாட்ல Doubt வந்தா இந்த Image ஐ Save செய்து Zoom செய்து படித்துக் கொள்ளவும்) நம்மளால முடிஞ்ச சின்ன உதவி ஹி ஹி ஹி..

நம்ம வாத்தியார்(மு.கா)பயந்த மாதிரியே Leak ஆனது உண்மயான பாடல்கள்தான் :(



இது தான் தலைவரோட அறிமுகப் பாடல்னு வேற சொல்லனுமா?


தேவுடா தேவுடா ஸ்டைலில் இருந்தாலும் SPB ன் வேகம் அதை மறக்கடிக்கும்


மண் வாசம் வீசும் வார்த்தைகளை தந்திருப்பவர் நா.முத்துக்குமார்





இது சஹானா பாடல்-மென்மையான பாடல்


வரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்து இவருடைய கற்பனை வார்த்தைகள் இசை இரைச்சலையும் தாண்டி நம் காதில் விழுகின்றது(!)




வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி-மென்மையுடன் அதிரடியும் கலந்திருக்கிறது


புதுமையான கற்பனை வார்த்தைகளோடு விளையாடியிருப்பவர் வைரமுத்து வே தான் இவரது வரிகளில் காதலும் காமமும் கலந்திருக்கிறது




இது Style ரஜினிக்காக உருவாக்கியிருக்கின்றனர் வரிகளுக்கான உரிமை பா.விஜய் யிடம்


வாலியின் வயது 75என்றால் அவரது மனதுக்கு வயது 20 தான் இவரின் வரிகளின் இளமையுடன் மிரட்டியிருப்பது ARR குரலில்



இது அநேகமாக ரஜினியின் என்ட்ரியின் போது இருக்கலாம் அல்லது படம் முழுவதும் Background Score ஆக வரலாம்



ஆக அனைத்து பாடல்களும் கேட்பவர்களின் நெஞ்சைத் தொடுவது உறுதி..


அப்பாடா பதிவு போட்டாச்சு எப்டி தான் 100 , 200 ன்னு பதிவெல்லாம் போட்றங்களோ? :)

Captain Vijayakanth's SABARI

அண்ணண் Vijayakanth Madurakkaaran Engal Thangam Thenpandi Singam நடிக்கும் SABARI going to hit the screens on March'16 2007.

பார்த்துப்புட்டு பேசுவோம்

23 ஆம் புலிகேசி vs IT Er.

இதை வடிவேலு style- ல் படிக்கவும்

காலையில் 9 மணிக்கு வர வேண்டியது.கணிணியின் திரையை பார்த்துக் கொண்டே வேலை பார்ப்பது போல் நடிக்க வேண்டியது. மாலையில் வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இடையில் 1 மணி நேரம் உணவு விடுமுறை வேறு.அது மட்டுமின்றி இடையிடையில் 5-10 நிமிடங்கள் தேநீர் அருந்த ஓய்வு நேரம்.கூடவே DORM-ல் உறங்க 40 நிமிடங்கள் சென்று விடும்.ஐந்தறிவு ஜூவன்கள் போல் ஒரு வாழ்க்கை.Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவுக்கு வேலை.கேட்டால் software company ல் வேலை என்று பீற்றிக்கொள்வது.

நிறைய எழுத தாண்ணே வந்திருக்கேன் எழுதுவோம்

Newer Posts Home