நம்ம பில்லு கோர்த்துவிட்டபடியால் எதையாவது எழுதலாம்னு உட்கார்ந்து யோசிச்சா....

சரி நாம செஞ்ச 8 சாதனைகளைப்(?) பத்தி எழுதலாமா,இல்ல மறக்க முடியாத 8 விஷயங்களை எழுதலாமா,இல்ல பிடிச்ச 8 படங்களைப் பத்தி எழுதலாமா,இல்ல நம்ம வாழ்க்கைல ஒரு 8 வருஷத்தைப் பிரிச்சு எழுதலாமா,இல்ல நமக்கு பிடிச்ச 8 மனிதர்களைப் பத்தி எழுதலாமா,இல்ல எட்டாம் எண்ணைப் பத்தியே எழுதலாமா,இல்ல .................
.
.
இப்டியே யோசிச்சு யோசிச்சு ஒண்ணுமே தேறாத காரணத்தால் எனக்கு எட்டாத இந்த எட்டாம் ஆட்டத்திலிருந்து நான் ஜகா வாங்கிக்கிறேணுங்ணா....பில்லு ஊஹூம் ஒண்ணும் வேலைக்காகல....

ஆகையால் பில்லு நம்மளை மன்னிச்சிருங்க....Next Meet பண்றேன்
Sing in the Rain...
I want more in the rain.....



சூப்பர்ஸ்டார் என்றாலே சாதனை தான் அதிலும் தற்போது வெளிவந்து உலகை கலக்கி கொண்டிருக்கும் சிவாஜியின் சாதனையை முறியடிக்க சூப்பர்ஸ்டாரால் மட்டுமே முடியும்..இதோ சாதனைப் பட்டியல்..


உலக அளவில் ஒரே நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ரிலீஸ் ஆன ஒரே பிராந்திய மொழிப் படம் சிவாஜிதான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகியுள்ள சிவாஜி, விரைவில் மலாய், சீன, ஜப்பானீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

உலக அளவில் அய்ங்கரன் உள்ளிட்ட ஐந்து விநியோக நிறுவனங்கள் சிவாஜியை திரையிட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 340 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

வெளிநாடுளில் இந்தியப் படம் ஒன்று இத்தனை பிரிண்டுகளுடன் திரையிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தமிழிலும் இதுவே முதல் முறை.

90களில் வெளியாகி இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய ஷாருக்கானின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்திற்குக் கூட வெளிநாடுகளில் 60 பிரிண்டுகள்தான் அனுப்பப்பட்டன. அந்த வகையில் சிவாஜி படைத்துள்ள சாதனை இமாலய சாதனையாகும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி வெளியானபோது, வெளிநாடுகளில் 90 பிரிண்டுகள் அனுப்பப்பட்டன. அப்போது அதுதான் பெரிய தமிழ்ப் பட சாதனையாக இருந்தது. இப்போது சிவாஜி வந்து அதை முறியடித்து விட்டது.

இனி உலக அளவில் சிவாஜி செய்து கொண்டுள்ள சாதனைகளைப் பார்ப்போம்.

இங்கிலாந்து: இங்கிலாந்து சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாப் 10 பட பட்டியலில் சிவாஜியை சேர்த்துள்ளனராம். படத்திற்கு இன்னும் ரேட்டிங் கிடைக்கவில்லை. ஆனால் டாப் 10 பட்டியலில் இந்தியப் படம் ஒன்று இடம் பெற்றிருப்பதே பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் (ஸ்காட்லாந்து உள்பட) மொத்தம் 15க்கும் மேற்பட்ட சென்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளாம். லண்டனில் மட்டும் 5 தியேட்டர்களில் சிவாஜி போடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தைப் பார்த்த பின்னர் ஐந்து தியேட்டர்களிலும் வருகிற 28ம் தேதி வரைக்கும் சிவாஜியையே ஓட்ட முடிவெடுத்துள்ளனராம்.

ஸ்காட்லாந்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் சிவாஜிதானாம். அங்குள்ள கிளாஸ்கோ நகரில் படம் திரையிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்காவில் தமிழ் சிவாஜி 46 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் வழக்கமாக வார இறுதியில்தான் தமிழ்ப் படங்கள் திரையிடப்படும். ஆனால் சிவாஜி விஷயத்தில் இது தலைகீழாக மாறியுள்ளதாம்.

ரெகுலர் காட்சிகளாகவே சிவாஜி அங்கு ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப சில தியேட்டர்களில் மேலும் சில நாட்கள் சிவாஜியை திரையிட தீர்மானித்துள்ளனராம்.

தலைநகர் வாஷிங்டனில், முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளது (தெலுங்கிலும் இதுவே முதல் முறையாம்) என்ற பெருமை சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

பே ஏரியா பகுதியில், சிவாஜி 2 தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இதில் தமிழ் சிவாஜிக்கு மட்டும் 5000 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளதாம்.

தமிழர்கள் மட்டுமல்லாமல், பிற மொழி பேசும் இந்தியர்களும், அமெரிக்க வெள்ளையர்களும் கூட சிவாஜியைப் பார்க்க முட்டி மோதிக் கொண்டுள்ளனராம்.

கொலம்பஸ் நகரில் முதல் நாள் முதல் காட்சியன்று உட்கார இடம் கிடைக்காமல் ரசிகர்கள் பலர் நின்று கொண்டே படம் பார்த்தார்களாம். (கார்த்தி(மு.கா) நின்னுக் கிட்டேவா பாத்தீங்க :) )

அமெரிக்காவில் சிவாஜியைத் திரையிடும் விநியோக உரிமையைப் பெற்றுள்ள வாணி மோகன் கூறுகையில், படம் திரையிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ். பல தியேட்டர்களில் பெரும் திரளான வெள்ளையர்களையும் காண முடிந்தது. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அவர்களும் ஆடிப் பாடி படத்தை ரசித்தனர்.

சிவாஜி படம் மூலம் எனக்கு 200 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, டிரெண்ட் செட்டரும் கூட என்றார்.

கனடாவில் டொரண்டோ நகரில் 6 தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது. வான்கூவர், ஓண்டாரியோ நகரங்களில் தலா 2 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

எட்மாண்டன் உள்ளிட்ட நகரங்களில் கனடா தமிழ்ச் சங்கம் சார்பில் விசேஷ காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இணைய தளத்தில், இந்த வாரத்தின் நம்பர் ஒன் படமாக சிவாஜியை சிறப்பித்துள்ளனராம். சிவாஜிக்கு 10க்கு 9.7 மார்க் கிடைத்துள்ளதாம்.

மலேசியா, சிங்கப்பூரில் சிவாஜி பெரும் சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் 40 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். ஆனால் கூட்டம் பெரும் திரளாக மாறிப் போனதால் கூடுதலாக 20 தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர். 60 தியேட்டர்களிலும் சிவாஜி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

ஜெர்மனியில் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆவது வெகு அரிதானதாம். ஆனால் சிவாஜி அதையும் தாண்டி, 25 செண்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. மூனிச் நகரில் நடந்த 25வது வருடாந்திர திரைப்பட பொருட்காட்சியில், 2 நாட்களுக்கு சிவாஜியை திரையிட்டுள்ளனர். அதிரடி பாட்டுக்கு பல ஜெர்மானியர்கள் ஆட்டம் போட்டு ரசித்துததான் இதில் ரொம்ப விசேஷமானது.

அயர்லாந்திலும் சிவாஜி புகுந்து விட்டது. அங்கு டப்ளின் நகரில் 2 தியேட்டர்களில் 6 காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது. சிவாஜிதான் ஜெர்மனியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்விட்சர்லாந்தில் (5 செண்டர்களில் 20 காட்சிகள்), பிரான்ஸில் (எஸ்பேஸ் சினிமா பாரீஸில் 4 காட்சிகள்), நார்வேயில் (ஓஸ்லோவில் ஒரு காட்சி), போலந்தில் (வார்சாவில் 2 காட்சிகள்), நெதர்லாந்தில் (8 செண்டர்கள்), டென்மார்க்கில் (10 செண்டர்கள்), இத்தாலியில், (இரு நகரங்களில்) என சிவாஜி கலக்கி வருகிறது.

தமிழர்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் சாதனை அளவாக 25 பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 9 பிரிண்டுகளுடன் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கிலும் சிவாஜிக்கு அமோக வரவேற்பாம். துபாய், அபுதாபி, ஷார்ஜா, கத்தார், பஹ்ரைன் என பல நாடுகளில் சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம். ஆகஸ்ட் வரை இங்கு சிவாஜியை ஓட்ட முடிவு செய்துள்ளனராம்.

இலங்கையில் 14 பிரிண்டுகளுடன் 9 மையங்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே இங்கும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு டிக்கெட்டுகள் புக் ஆகி விட்டதாம்.

கை வலிக்க வலிக்க அடிச்சாலும் சிவாஜி கதை நீண்டு கொண்டே போகுதப்பா!

சூப்பர் ஸ்டாரின் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்!

Newer Posts Older Posts Home