இன்று (04/07/2007) உன் பிறந்த நாள்.....
நமக்கு இடையில் இந்த வாழ்த்துக் கவிதையெல்லாம் தேவையில்லை தான் என்றாலும் என்னை வெளிப்படுத்த இந்த் இனிய நாளை சந்தர்ப்பமாக்கிய என் வார்த்தைகள்...
பூமிக்கு என் உடல் வந்து 2 ஆண்டுகள்
கழித்து உயிர் வந்த அதிசயம்-நீ!
என் ஆழ்மனதின் ஓசைகளையும் கேட்கும்
திறன் கொண்ட அதிசயம்-நீ!
என் ஒவ்வோர் தேவைகளையும் சரியாகத்
தெரிந்த அதிசயம்-நீ!
வினாக்களையே தரும் என்னிடம் என்றும்
விடையாகத் தெரியும் அதிசயம்-நீ!
என் ஒவ்வொரு காத்திருப்புக்கும் அர்த்தம் சொன்னவன் நீ!
என் மொத்த வாழ்வின் காத்திருப்பின் அர்த்தமும் நீ!
இலக்கியம் சொன்ன இலக்குவனை நான் அறியேன்!
ஆனால் என் வாழ்வின் இலக்கணம் நீ!
எனக்காக எதையும் செய்பவன் நீ
உனக்காக எதை நான் செய்ய எத்தனித்தாலும்
"எதுக்கு அது?"என்பவன் நீ!
ஏற்றத்தில் தட்டிக் கொடுப்பவனும் நீ!
இற்க்கத்தில் தட்டி வைப்பவனும் நீ!
உடன் பிறந்தவனுக்கு உதவி செய்வதையே பாரமென
எண்ணும் உலகில் உடன் பிறந்தவனின் நண்பர்களுக்கும்
உதவி செய்யும் உன் மனப் பாங்கு என்னிடமும்
எவரிடமும் கண்டதில்லை நான்!
நான் தட்டுத் தடுமாறிய பொழுதிலெல்லாம்
என் வாழ்க்கைப் பாதயைக் காட்டியவன் நீ!
மாற்றியவனும் நீயே!
நமக்குள் பெரிதாக எந்த பிரச்சினையும் எழுந்ததில்லை
எழவும் அனுமதிக்காதவன் நீ!
எனை அழவும் அனுமதிக்காதவன் நீ!
இன்னுமொரு பெற்றோராய்
உற்ற நண்பனாய்
நல்ல ஆசனாய்...
இப்படி எல்லாமுமாய் எனக்கு நீ!
நீ என் தம்பியாகக் கடவதற்கு தவம் தான்
செய்திருப்பேனோ என எண்ண வைக்கிறாயடா நீ!
மறு பிறவிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான்
ஆனாலும் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் வரும்
பிறவிகளிலும் உனைத் தம்பியாகப் பெற!
நம் பெற்றோரின் வாழ்வின் அர்த்தம் நாம்
உன் வாழ்வின் அர்த்தம் நாங்கள் எங்களுக்காக
எதையும் துச்சமெனத் தூக்கி எறிபவன் நீ
உனக்காகவே எங்கள் இந்த வாழ்க்கை.........
இன்னும் என்னென்னவோ மனதில் இருந்தாலும் வார்த்தைகளாய் வர மறுக்கும் அழகோவியங்கள் அவை. வாழ்த்துக்கள்டா குட்டி!
Anonymous said...
Wishes Buddy....
July 4, 2007 at 4:41 PM
Anonymous said...
Birthday Wishes ...
July 4, 2007 at 5:17 PM
Dreamzz said...
yaarunga kutty? aan kuttya? pen kuttya?
July 5, 2007 at 3:27 AM
Dreamzz said...
//காட்டியவன்//
ஓ.. ஆண் குட்டியா.. ஒகே ஒகே. என் சார்பாகவும் வாழ்த்து சொல்லிடுங்க!
July 5, 2007 at 3:27 AM
Dreamzz said...
கவிதையும் அருமையாக இருக்குது!
July 5, 2007 at 3:28 AM
Dreamzz said...
//இலக்கியம் சொன்ன இலக்குவனை நான் அறியேன்!
ஆனால் என் வாழ்வின் இலக்கணம் நீ!
//
என்ன கான்செப்ட்! சூபர் ;)
July 5, 2007 at 3:28 AM
Dreamzz said...
//இன்னும் என்னென்னவோ மனதில் இருந்தாலும் வார்த்தைகளாய் வர மறுக்கும் அழகோவியங்கள் அவை. வாழ்த்துக்கள்டா குட்டி!//
எனதும்! வாழ்க உமது நட்பு!
July 5, 2007 at 3:29 AM
மு.கார்த்திகேயன் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி (உங்க தம்பி தானே செந்தில்)
July 5, 2007 at 6:44 AM
சுப.செந்தில் said...
@Dreamzz
நன்றிங்க ட்ரீம்ஸ்....
@மு.கா
நன்றி கார்த்தி(ஆமா கார்த்தி தம்பி தான் ஆனா பேரு குட்டி இல்ல சும்மா செல்லமா கூப்பிட்றது,தம்பி பேரு சுந்தரம்)
July 5, 2007 at 11:32 AM
Bharani said...
Happy Birthday to ur Bro :)
July 5, 2007 at 11:58 AM
சுப.செந்தில் said...
@Bharani
Thanks பில்லு :)
July 5, 2007 at 4:31 PM
Raji said...
Paasamalarukku Belated birthday wishes sollidunga Sendhil:-)
July 11, 2007 at 2:25 PM
Raji said...
Kavidha supernga
July 11, 2007 at 2:26 PM
சுப.செந்தில் said...
@ராஜி
Thanks for the wishes to my soul..
July 12, 2007 at 7:24 PM