எங்கே செல்லும் இந்த பாதை?


விலா எலும்பில் வலு தேயும் வரை
விடுவதில்லை என எனைத் தேடிப்பார்க்க
ஆரம்பித்துவிட்டேன்!
மலை முகடுகளில் பொட்டல் காடுகளில்
பாதை தெரியும் வரை என்
பாதம் தேயும் வரை!
உமியைத் தூக்க தெம்புள்ளவரை
கலவி ஆசை நரைக்காதாம்!
உமியைப் பார்க்க முடியும் வரை
எனைப் பற்றிய என் தேடல் ஆசையும் நரைக்கப் போவதில்லை!
இந்தப் பாதை எங்கே முடியும் என்று எனக்கு கவலை இல்லை
எனக்கான இன்னுமொரு பாதையை முடிந்த இடத்திலிருந்து வகுத்துக் கொண்டு எனைப் பற்றிய தேடல் பயணம் இனிதே தொடரும்!
பயம் வரும் வரை
பயணங்கள் எப்போதும் முடிவதில்லை!

11 comments:

உங்களுக்குள்ளேயே தேடுங்க! கண்டிப்பா கிடைக்கும்!!

August 8, 2007 at 6:55 PM  

கவிதை நல்லா இருக்கு!!

August 8, 2007 at 6:55 PM  

தேடல் கவிதை அருமை செந்தில்.. இன்னும் நிறைய எழுதுங்க

August 8, 2007 at 9:10 PM  

அதற்கேற்ற படம் அருமை செந்தில்

August 8, 2007 at 9:10 PM  

உமி உமின்னு சொல்றீங்களே.. அதென்ன உமாங்கிற பேரோட சுருக்கமா :)

August 8, 2007 at 9:10 PM  

@Dreamzz
தேடினாலும் கிடைக்காதுங்க.. :)

August 9, 2007 at 4:25 PM  

@மு.கா
உமி-நெல்லிலிருந்து பிரித்த பின் வருமே அதாங்க...
புதுசா உமா அது இதுன்னு கோர்த்துவிட்ரீங்களே வாத்தியாரே!!!

August 9, 2007 at 4:27 PM  

engappa romba naala aalai kaanum

August 24, 2007 at 6:22 PM  

@Dreamzz
பயங்கர பிஸின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்!! :)
Access Restricted in New Company!!!
So The Delay!!!!

August 30, 2007 at 8:46 PM  

Nice one:)

November 13, 2007 at 12:22 PM  

indha company nalla illa senthil.. vitrunga.. blogger allow panra company ku thaavunga! :)

August 1, 2009 at 5:55 AM  

Older Post Home