Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

இந்த மாசத்துக்கான பதிவு கோட்டா முடிஞ்சிருச்சு அதனால Jolly யா இருந்தா நம்ம நண்பர் ACE(@)சரவணன் டேக் பண்ணதோட விடாம மீண்டும் ஞாபகப்படுத்திட்டாரு, ப்ளாக் நண்பர்கள் எல்லாரும் ஏற்கனவே ஏகப்பட்ட அழகுகளைப் போட்டு தாக்கிட்டாங்க அதனால பெரிய யோசனைக்குப் பிறகு கோடி அழகுகளில் இதோ என் ஆறு

1.உணவு
செவிக்கு கூட உணவில்லாம ஒரு வாரம் இருந்திட முடியும் ஆனா இந்த வயிற்றை 2 நாள் விட்டாலே என்னென்னவோ ஆயிடும்.
அதுலயும் அந்த இட்லி-சட்னி Combination super. காலைல எங்க வீட்ல தினம் இட்லிதான் அதுவும் எங்கம்மாவோட கைப்பக்குவத்து இட்லி சும்மா மல்லிகைப் பூ மாதிரி இருக்கும் அதுல ஒரு 10 அ 12 இட்லிய உள்ள தள்ளுனா ஆஹா அது தான் அழகு.இந்த மாதிரி மனதை குதூகலப்படுத்தும் எந்த உணவும் அழகுதான்

2.தண்ணீர்
உணவு கூட 8 மணி நேரத்துக்கு ஒரு தடவ சாப்பிட்டால் போதும் ஆனா இந்த தண்ணீர் இல்லன்னா அவ்வளவுதான்!
அதுனால தண்ணீர் எந்த வடிவத்திலும் அழகு ஆறு,கிணறு,அருவி,பானையில் உள்ள நீர்....

3.தூக்கம்
நிம்மதியான தூக்கம் ஒரு அழகு.தூக்கம் இல்லாமல் எந்த மனிதனாலும் சிறப்பாக செயல்பட முடியாது. அதுலயும் நிம்மதியான தூக்கம்னாஎப்பிடின்னா படுத்தா அடுத்த 5 நிமிஷத்துல தூங்கிடணும் அதுதான் வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் அழகு.

4.பொழுதுபோக்கு
அன்பே சிவம் படத்தின் ஓர் பாடலில் வரும் வரி " ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்ல"
இங்க போதைன்றது பொழுதுபோக்கு.
சின்ன வயசுல விளையாடிய கிட்டிப்புள்,கல்லா மண்ணா.... இதெல்லாமே அந்த வயது பொழுதுபோக்குகள் தான் அதுனால வயதுக்கேற்ற பொழுதுபோக்கும் அழகே!

5.வேலை
படிக்கும் போது படிக்கும் வேலை அழகு,வேலையில் சேர்ந்த பின் செய்யும் வேலை அழகு,சும்மா இருக்கும் போது கூட மனம் ஏதோ ஒன்றை அசை போடுவது வேலை தான் ஆக வேலை அழகு.

6.சிரிப்பு
இந்த அழகுக்கு வயது வித்தியாசமே கிடையாது.
உலகில் உள்ள அழகுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தாற் போன்று இந்த புன்னகை (எ) சிரிப்பு அழகு தான்.

எழுதாத அழகைப்(?) பற்றி எழுத எண்ணியதால் இந்த ஆறும் என் பார்வையின் வார்த்தையில்......

Older Posts Home